Tuesday, January 15, 2013

சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணொருவர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்ததைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதி:-சவூதிக்கு எதிராக செயற்பட இலங்கைக்கு அழைப்பு!

Tuesday, January 15, 2013
இலங்கை::சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணொருவர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்ததைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு, புளூமென்டல் வீதியைச் சேர்ந்த அங்கஸ் பெரேரா (வயது 30) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான இப்பெண் காயமடைந்த நிலையில் வீதியில் வீசப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்தே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்ற இப்பெண், அவரது முதலாளியினால் இரக்கமின்றி தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது இடது கையில் 5 வெட்டுக் காயங்களும் வலது கையில் எரிகாயங்களும் காணப்படுகின்றன. அத்துடன், தனது தலையில் ஆடைகளைக் கழுவும் இரசாயன பதார்த்தம் போடப்பட்டதாகவும் தாக்குதலினால் தான் பாதிக்கப்பட்டதாகவும்  இப்பெண் கூறினார்.
சவூதிக்கு எதிராக செயற்பட இலங்கைக்கு அழைப்பு!
இலங்கையின் பணிப்பெண் ரிசானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவூதி அரேபியாவுக்கு எதிராக மனித உரிமைகள் சபையில் யோசனை முன்வைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

சர்வதேசத்தின் இந்த கோரிக்கைக்கு இலங்கையும் தமது ஆதரவை வெளிப்படுத்தவேண்டும் என்று ஏசியன் ரிபீயுன் இணையத்தளம் கோரியுள்ளது

எதிர்வரும் பெப்ரவரி 25 முதல் மார்ச் 22 வரை மனித உரிமைகள் சபையின் 22 வது அமர்வுகள் இடம்பெறவுள்ளன

இதன்போது சவூதி அரேபியாவின் மனித உரிமைகள் மீறலுக்கு எதிராக சர்வதேசம் தீவிரமாக செயற்படவேண்டும் என்றும் ஏசியன் ரிபியூன் கோரியுள்ளது.

No comments:

Post a Comment