Tuesday, January 15, 2013

வடக்கு கிழக்கு பகுதிகளில் பொருளாதார சுவீட்சத்தைக்கட்டி எழுப்புவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது: வெடிச் சத்தங்கள் கேட்ட இடங்களில் விழாக்கள் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது -புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் கஜதீர!

Tuesday, January 15, 2013
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ   அரசாங்கம் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த வருடம் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இவ்வருடம் அத்தொகை அதிகரிக்கப்பட்டு 500 மில்லியனாக உயர்தப்பட்டுள்ளது என புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் கஜதீர தெரிவித்தார்.

முல்லைத்தீவு, கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற புனர்வாழ்வு பெற்ற மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் பொருளாதார சுவீட்சத்தைக்கட்டி எழுப்புவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. அரசாங்கத்தின் இந்த முயற்சியில் புனர்வாழ்வு பெற்ற அனைவரும் பங்களிப்பு வழங்கும் போது இதன் பூரணத்துவத்தை உணரமுடியும்.

தேவையற்ற குழப்பங்களுக்கும் தீய எண்ணங்களுக்கும் இடம்கொடுக்காமல் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு உங்கள் வாழ்வின் ஏற்ற இறக்கங்களைக் கருத்தில்கொண்டு வாழவேண்டும்.

புனர்வாழ்வு பெற்றவர்களின் வாழ்வாதராத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கமும் எமது அமைச்சும் கூடிய கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது. இதற்காக பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.
அத்துடன் வடக்கில் வெடிச் சத்தங்களும் குண்டுச் சத்தங்களும் கேட்ட இடத்தில் இன்று பட்டாசுகள் கொழுத்தி விழாக்களைக் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சமாதான சூழலை குழப்புவதற்கு சில தீய சத்திகள் முயற்சித்து வருவதோடு இதனை விமர்சித்தும் வருகின்றது. இந்த சத்திகளின் சதியில் இருந்து நாங்கள் விடுபட்டு ஒரு நாட்டு மக்கள் என்ற சிந்தனையுடன் நாம் செயற்பட்டால் எங்கள் எதிர்கால வாழ்வு சிறந்ததாக அமையும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment