Tuesday, January 15, 2013

இந்தியா, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் பேச்சு தோல்வி:-இந்திய வீரரின் தலை கிடைக்காததால் பதற்றம் : எல்லையில் படைகள் குவிப்பு, போர் மூளும் அபாயம்!

Tuesday, January 15, 2013
புதுடெல்லி::பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய வீரரின் தலை இன்னும் கிடைக்காததால் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்படுவதால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டுமாறு பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே பரஸ்பரம் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அடிக்கடி மீறி வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 120 முறை இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவும் முயற்சியும் நடந்தது. இந்நிலையில் காஷ்மீர் எல்லையில் கடும் பனிப்பொழிவை பயன்படுத்தி கொண்டு கடந்த 8ம் தேதி இந்தியாவின் பூஞ்ச் பகுதிக்குள் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் நுழைந்தனர். அங்கு பணியில் இருந்த சுதாகர் சிங், ஹேம்ராஜ் சிங் ஆகிய 2 வீரர்களை கொடூரமாக கொலை செய்தனர். அத்துடன் ஹேம்ராஜ் என்ற வீரரின் தலையையும் வெட்டியுள்ளனர். இது இந்திய ராணுவத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று ராணுவத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், ஹேம்ராஜ் தலை கிடைக்கும் வரை ஓய மாட்டோம் என்று கூறி அவருடைய குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை பல்வேறு தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். ‘பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறிய செயலை மன்னிக்க முடியாது. ஏற்க முடியாது. அதற்கு எந்த நேரத்தில், எந்த இடத்தில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பது இந்தியாவுக்கு தெரியும் என்று ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங் ஆவேசமாக கூறியுள்ளார். ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியும், எதையும் சந்திக்க தயார்Õ என்று பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.

பரபரப்பான சூழ்நிலையில் முக்கிய எதிர்கட்சியான பாஜவும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. Ôபாகிஸ்தான் வீரர்கள் எடுத்து சென்ற இந்திய வீரர் ஒருவரின் தலையை திரும்ப கொண்டு வந்து தராவிட்டால் குறைந்தபட்சம் 10 பாகிஸ்தான் வீரர்களின் தலையை கொண்டு வர வேண்டும்Õ என மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசியுள்ளார். ‘எல்லை நிலவரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மவுனமாக இருப்பது ஏன்?’ என மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பினார். இதையடுத்து எல்லை பிரச்னை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லியுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், எல்லையில் நிலவும் பதற்றத்தை அரசியலாக்க வேண்டாம். பாகிஸ்தானின் அத்துமீறலை கண்டித்து அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், எல்லை பிரச்னை தொடர்பாக எந்த நடவடிக்கை எடுத்தாலும், எதிர்க்கட்சிக்கு தெரிவிக்காமல் எதையும் செய்ய மாட்டோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்Õ என்று தெரிவித்தன. மேலும், Ôஎல்லையில் பதற்றத்தை தணிக்க இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நாளை (இன்று) தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பாஜ தலைவர்களை சந்தித்து  விவரங்களை எடுத்துரைப்பார் எனவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், இந்திய , பாகிஸ்தான் எல்லை பதற்றத்தை தணிக்க, இரு நாட்டு உயரதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூடான் சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அங்கு நிருபர்களிடம் கூறுகையில், இந்திய வீரரின் தலையை துண்டித்தது எந்த காரணத்தை முன்னிட்டும் ஏற்க முடியாதது. எல்லையில் நடக்கும் விஷயங்கள் குறித்து நமது ராணுவத்தினர் அளிக்கும் தகவல்களை ஆய்வு செய்து வருகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. எனினும், இரு நாட்டு அமைதி பேச்சுவார்த்தை முறிவடையாமல் இருப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்...

காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதற்காக பாகிஸ்தான் மிகவும் தந்திரமாக இத்தகைய அத்து மீறல்களை மேற்கொள்கிறது. இதை அந்தந்த பகுதி பட்டாலியன் கமாண்டர்கள் முடிவு எடுத்து பதிலடி தாக்குதல் நடத்துவார்கள். ஜனவரி 8-ந்தேதி பூஞ்ச் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல், மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. 10 நாட்களாக நோட்டமிட்டு இந்த தாக்குதலை அவர்கள் நடத்தி உள்ளனர். அவர்கள் நடந்து கொண்ட விதம் ஜெனீவா மாநாட்டு ஒப்பந்தத்துக்கு எதிரானது. ஆனால் தாக்குதல் நடத்தி விட்டு, பாகிஸ்தான் பொய் சொல்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் பெரும் போராக மாற வாய்ப்பு இல்லை. தற்போதைய சூழலில் இந்தியா தக்க பதிலடி கொடுக்க உரிமை உள்ளது.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும், அங்குள்ள தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். இந்திய ராணுவ வீரர்களை கொன்று தலையை துண்டித்து வெற்றி கேடயமாக கொண்டு செல்கிறார்கள். இதற்கு முன்பும் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன. நமது வீரர்களின் தலை துண்டிக்கப்படுவது ராணுவத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டே இதை செய்கிறது. இனி எல்லையில் உரிய பதிலடி கொடுப்பதற்கு இந்தியா ஒரு போதும் தயங்காது.

இவ்வாறு ராணுவ தளபதி பைக்ராம்சிங் கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் பேச்சு தோல்வி அடைந்து விட்டதால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இது மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. இக்கட்டான இந்த சூழ்நிலையிலும் பிரதமர் மன் மோகன்சிங் மவுனமாக இருப்பதை பல்வேறு கட்சிகளும் கண்டித்துள்ளன. பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. கூறி வருவது காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

1-11-12_findyour_INNER_468x60.gif

No comments:

Post a Comment