இலங்கை::யாழ்ப்பாணத்தில் (புலிகளின் ஆதரவு கட்சியான) சம உரிமை இயக்க உறுப்பினர்களது வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள (புலிகளின் ஆதரவு) யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தும் முகமாக கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டிருக்கும் நிலையிலேயே இவர்களது வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதலினால் வாகனத்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும், (புலிகளின் ஆதரவு கட்சியான) சம உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.
இரு மோட்டார் சைக்கிளில்களில் வந்த நபர்களே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக புலிகளின் ஆதரவு கட்சியான சம உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment