Tuesday, January 15, 2013

இன்று 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் ரீட் மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2 மணிக்கு நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது!

Tuesday, January 15, 2013
இலங்கை::இன்று 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் ரீட் மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2 மணிக்கு நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ரீட் மனுவை ஜனவரி மாதம் 03 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது. மனுவை  இன்று 15 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரை நீதின்மன்றத்தில் இன்று ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி அறிவிப்பு விடுத்திருந்தது.

இதேவேளை,பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரதம நீதியரசரின் ரீட் மனுவை செல்லுப்படியற்றதாக்க வேண்டும் என கோரியே இந்த இடையீட்டு மனுக்களில் ஒன்றை ஸ்ரீரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்க சம்மேளனம் தாக்கல் செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எதிராக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment