Friday, January 11, 2013

கிளிநொச்சி மாவட்டத்தில் இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்கள் 9 தற்காலிக முகாம்களில்!

Friday, January 11, 2013
இலங்கை::கடந்த சில தினங்களாக நிலவிய மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்கள் மாவட்டத்தின் 9 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை பாதிப்புகளினால் 92 குடும்பங்களைச் சேர்ந்த 339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் மழையினால் பாதிப்பிற்குள்ளாகி இருந்ததாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.சுகுணதாஸ் தெரிவித்தார்.

கரைச்சி, பச்சிலைப்பலை, கண்டாவளை மற்றும் பூநகரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளே மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனரத்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கிளிநொச்சி மாவட்டத்தில் வானிலை சீரடைந்து வருவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்பி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment