Friday, January 11, 2013
இலங்கை::50,821 பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாளை சனிக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வில் இவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
10,000 தமிழ் பட்டதாரிகள் உட்பட 50,821 பேருக்கும் விரும்பிய இடங்களில், விரும்பிய துறைகளில் நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என நேற்று அமைச்சில் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், அமைச்சரவை அனுமதிக்கு அமைய 50,824 பட்டதாரிகளும் கடந்த வருடம் அரசசேவையில் இணைக்கப்பட்டு ஒருவருட கால பயிற்சியைப் பெற்று வருகின்றனர். ஒருவருட பயிற்சியைப் பூர்த்தி செய்த அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
வர்களுக்கு விரும்பிய மாவட்டத்தில், விரும்பிய துறையில் நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பயிற்சிகளைப் பெற்ற அனைவரையும் இம்முறை சாதாரண நீதிகளுக்கு மாறாக மீண்டும் விண்ணப்பம் கோராமல், நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தாமல் நிரந்தர நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த காலங்களில் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் போது காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்வகையில் இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. பட்டதாரிகளை அவர்களின் மாவட்டங்களிலேயே நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மூன்று இனங்களையும் சேர்ந்த மூன்று பட்டதாரிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும் விசேட நிகழ்வில் நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கிவைக்கவுள்ளார் என்றார்.

No comments:
Post a Comment