Tuesday, January 29, 2013

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து தொழில் புரிந்த இந்திய பிரஜை ஒருவர் கைது:-36 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!:-கல்முனையில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது!

Tuesday, January 29, 2013
இலங்கை::சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து தொழில் புரிந்த இந்திய பிரஜை ஒருவர் மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல் இயந்திரம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்த வேளை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

36 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை கடத்த முயன்ற ஒருவர்  கைது!

இந்தியாவுக்கு தங்க கட்டிகளை கடத்த முயன்ற ஒருவரை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

36 இலட்சம் ரூபா பெறுமதியான ஆறு தங்க கட்டிகளை உடலுக்குள் மறைத்து வைத்தே குறித்த சந்தேக நபர் கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை கடத்துவதற்கு முயற்சித்துள்ளார்.

குறித்த நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுங்க அதிகாரிகள் அவரை விசாரணைக்கு உட்படுத்தினர். இதன்போதே உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

கல்முனையில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது!

தனது பெட்டியில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனையில் பொலில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் பரிசோதனையின் போதே பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பெட்டியில்; கஞ்சா வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

குறித்த கான்ஸ்டபிளை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் இன்று செவ்வாய்கிழமை காலையில் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் பொலிஸ் சோதனை நடவடிக்கையின் ஒரு கட்டமாக கல்முனை பொலிஸ் நிலைய பரிசோதனை நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டது.

அம்பாறை மாவட்ட பொலில் அத்தியட்சகர் அஜித்ஹோகன தலைமையிலேயே இந்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பெட்டியில் 250 கிராம் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடித்ததையடுத்து அவரை உடன்கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்டபிளை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment