Tuesday, January 29, 2013

66 டன் சரக்கு ஏற்றி செல்லும் நவீன ராணுவ விமானம்: சீனா சோதனை வெற்றி!

Tuesday, January 29, 2013
பீஜிங்::ராணுவத்தை நவீனமயமாக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 66 டன் சரக்கு ஏற்றி செல்லும் விமானத்தை சீனா வெற்றிகரமாக சோதனை செய்தது. சீனாவின் வடமேற்கே ஷான்சி மாகாணத்தில் யான்லியாங் விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஒய்,20 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 66 டன் எடையுள்ள சரக்கை ஏற்றிக்கொண்டு 13 ஆயிரம் மீட்டர் உயரம் வரை கூட பறக்கும் திறன் கொண்டது.

இது அமெரிக்காவின் சி,17 மற்றும் ரஷ்யாவின் மிமி,76 ரக விமானங்களுக்கு ஈடானது. இந்த விமானத்தால் டாங்குகள், ராணுவ வீரர்களை ஏற்றி கொண்டு இந்திய திபெத் எல்லை மலைப்பகுதிகளில் உள்ள எட்ட முடியாத உயரமான பகுதிகளுக்கு கூட எளிதில் செல்ல முடியும். இந்த விமானத்தின் பெரும்பாலான பகுதிகள் சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் சோலோவி டி,30கேபி,2 வகையைச் சேர்ந்த 4 இன்ஜின்கள் இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. ஒய்,20 ரக விமானம் தயாரிக்கப்பட்டது.

No comments:

Post a Comment