Monday, January 14, 2013

2014ல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க வேண்டும் - மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்!

Monday, January 14, 2013
சென்னை::மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:

பட்டி தொட்டியெல்லாம் விளக்க கூட்டங்கள் நடத்தி, மத்திய அரசின் சாதனைகளை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும். இளம் தலைவர் ராகுல் தலைமையில் 2014ல் மத்திய அரசு அமையும்.

அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி, தனியார் கல்லூரிகளில் 25 சதவீத இலவச இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு கடன், விவசாய கடன் தள்ளுபடி, நான் பொறுப்பு வகிக்கும் கப்பல் துறை உள்பட பல்வேறு துறைகளில் சாதனைகள் செய்துள்ளோம். வரும் 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற, நம்முடைய சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பிரசாரத்துக்கு இன்றே புறப்படுவோம்.

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார். கூட்டத்தில் மத்திய அரசின் சாதனை பட்டியல் அடங்கிய துண்டு பிரசுரத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சாகர் ராய்கா வெளியிட, மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, முன்னாள் எம்எல்ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா, ஜெயக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், நாசே.ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர். மத்திய சென்னை காங்கிரஸ் தலைவர் கோவிந்தசாமி வரவேற்றார். வடசென்னை மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ நன்றி கூறினார்.

No comments:

Post a Comment