Monday, January 14, 2013
இலங்கை::புதிய பிரதம நீதியரசரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்னும் சில தினங்களுக்குள் புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்படுவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றப்பிரேரணைக்கு அமைவாக பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவியில் இருந்து நீக்கும் உத்தரவில் ஜனாதிபதி நேற்று கையொப்பமிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய பிரதம நீதியரசரை நியமிப்பது தொடர்பில் பரிந்துரைக்கப்படும் பெயருக்கு பாராளுமன்ற பேரவையின் அங்கீகாரம் பெறப்படல் வேண்டும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
புதிதாக பதவியில் நியமனம் பெறுவதற்கு தகுதியானவரின் பெயர் அல்லது பெயர்களை ஜனாதிபதி சபாநாயகர் ஊடாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற பேரவை அங்கீகரிக்கும் பெயர் மீண்டும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதும் அரசியலமைப்பின் பிரகாரம் புதிய பிரதம நீதியரசரை ஜனாதிபதி நியமிப்பார் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment