Tuesday, January 15, 2013
இலங்கை::புனர்வாழ் வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட முன் னாள் புலி உறுப்பினர்கள் 125 பேரு க்கு இன்று கடன் உதவி வழங்கப் படவுள்ளது. மன்னார் நகர சபை மண்டபத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் இன்று நடை பெறவுள்ள நிகழ்வின் போது கடன் உதவியை அமைச்சர் உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கவுள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு சுயதொழிலுக்காக வழங்கப்படும் சுயதொழில் ஊக்குவிப்பு கடன் உதவி திட்டத்தின் கீழே இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஆகக்கூடியது இரண்டரை இலட்சம் ரூபா வீதம் 125 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு கடன் உதவி வழங்கப்படவுள்ளது. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டம் கோப்பாப்பிலவு பகுதியில் இறுதியாக மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு தமது வேலிகளை அமைப்பதற்கான முள்ளுக்கம்பிகளும், 5 தென்னங்கன்றுகளும் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 100 குடும்பங்களுக்கு நஷ்டஈடுகளும் நேற்று வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டி யாராச்சி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ். சதீஸ்குமார் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment