Tuesday, January 15, 2013

குற்றப்பிரேரணை அறிக்கை மீதான வாக்கெடுப்பிலிருந்து நாங்கள் வெளியேறிய போதிலும் புதிதாக நியமிக்கப்படும் நீதியரசரை நாம் வரவேற்போம் - லங்கா சமசமாஜ கட்சியின் உறுப்பினரும் சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ வித்தாரண!

Tuesday, January 15, 2013
இலங்கை::குற்றப்பிரேரணை அறிக்கை மீதான வாக்கெடுப்பிலிருந்து நாங்கள் வெளியேறிய போதிலும் புதிதாக நியமிக்கப்படும் நீதியரசரை நாம் வரவேற்போம் என்று லங்கா சமசமாஜ கட்சியின் உறுப்பினரும் சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 நிலையியற் கட்டளைகளை திருத்துதல் மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர்களை நியமிக்கவேண்டும் என்று எம்மால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்தே நாம் குற்றப்பிரேரணை வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தோம்.

அரசியலமைப்பின் பிரகாரம் நீதியரசர் ஒருவரை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அதன்பிரகாரம் நியமிக்கப்படும் புதிய நீதியரசரை நாம் வரவேற்போம் என்றார்.

No comments:

Post a Comment