Tuesday, December 11, 2012

கிழக்கு மாகாண சபையின் Budget முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீதினால் சமர்ப்பிப்பு!.

Tuesday, December 11, 2012
இலங்கை::இரண்டாவது கிழக்கு மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீதினால் இன்று செவ்வாய்க்கிழமை காலை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தவிசாளர் டபிள்யூ.ஜி.எம்.ஆரியவதி கலப்பதி தலைமையில் ஆரம்பமானது. இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதினால் 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்ட வாசிப்பை தொடர்ந்து ஆளுநர் செயலகம், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, மற்றும் மாகாண பேரவை செயலகம் போன்றவற்றிற்கான குழுநிலை விவாதம் தற்போது இடம்பெறுகிறது.

இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது.

இதன் பின்னர் ஏனைய மாகாண அமைச்சுக்களிற்கான விவாதம் நாளை தொடக்கம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment