Tuesday, December 11, 2012
இலங்கை::2030 ஆம் ஆண்டளவில் உலகின் அதிக வல்லமை படைத்த கண்டமாக ஆசியாக் கண்டம் திகழும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பலத்தை விஞ்சுமளவுக்கு ஆசிய நாடுகள் முன்னேற்றம் காணும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டும் தசாப்தங்களில் அமெரிக்கப் பொருளாதாரத்தை புறந்தள்ளி சீனாவின் பொருளாதாரம் முன்னிலை பெறும் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சனத்தொகையின் அளவு, உள்நாட்டு உற்பத்தி, புதிய தொழில்நுட்பங்கள், இராணுவ பலம் என அனைத்திலும் ஆசியக் கண்டம் முதலிடம் பெறும் என கூறப்படுகின்றது.
ஐரோப்பிய வலய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகள், மேற்குலக நாடுகளில் சடுதியாக வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றமை போன்றன இதில் செல்வாக்கு செலுத்தும் என கூறப்படுகின்றது.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் இந்த ஆய்வு அறிக்கை இறுதியாக 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment