Tuesday, December 11, 2012
இலங்கை::இலங்கை மனித உரிமைகளை பாதுகாத்து, மேம்படுத்தும் நோக்கிலான தேசிய செயற்பாட்டு திட்டம் நேற்று (10) இணைத்தளத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மனித உரிமை தொடர்பான விசேட கோட்பாடுகளுக்கு அனுமதி வழங்கியதுடன், 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி இந்த தினத்தை வருடாந்தம் அனுஷ்டிக்குமாறு சகல உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொண்டது.
2008 ஆம் ஆண்டு இலங்கை ஐக்கிய நாடுளின் மனித உரிமை பேரவையின் பூகோள மீளாய்வு செயற்பாடுகளுடன் இணைந்து செயற்பட்டதன் பிரதிபலனாக இந்த Nசிய செயற்பாட்டு திட்டத்தை அடையாளப்படுத்த முடியும்.
இதன் போது, நாட்டுக்குள் மனித உரிமை நிலைமைகளை பாதுகாத்து, மேம்படுத்துவதற்காக சகல விடயங்களும் உள்ளடங்கிய தேசிய திட்டம் செயற்படுத்தப்பட்டு, அதனை செயற்படுத்த போதாக இலங்கை உறுதிமொழி வழங்கியது. 2012 ஆம் ஆண்டு மனித உரிமை தினத்தில் இந்த தேசிய செயற்பட்டு திட்டத்தை இணையத்தளத்தில் வெளியிட ஜனாதிபதியின் மனித உரிமைகள் தொடர்பான ஆலோசகரும், அமைச்சருமான மகிந்த சமரசிங்க தீர்மானித்திருந்தார்.

No comments:
Post a Comment