இலங்கை::பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவகாரம் பொதுநலவாய நாடுகள் உறுப்புரிமையை எந்த வகையிலும் பாதிக்காது என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மான விவகாரகத்தில் பொதுநலய நாடுகள் அமைப்போ அல்லது வேறும் சர்வதேச அமைப்புக்களோ அரசாஙகத்தின் மீது குற்றம் சுமத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிரானிக்கு எதிரான விசாரணைகளை பொதுநலவாய நாடுகள் அமைப்பிடம் முறைப்பாடு செய்ய முயற்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, நெவில் சமரக்கோன் மற்றும் சரத் என் சில்வா ஆகிய இரண்டு பிரதம நீதியரசர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாகரத்தை பூதாகரமாக்கி அதன் மூலம் அரசியல் லாபமீட்ட சில தரப்பினர் முயற்சிப்பதாக அமைச்சர் அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்

No comments:
Post a Comment