Wednesday, December 12, 2012
இலங்கை::இலங்கையில் சமீபத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாகாணம் வாரியாகவும், நகரங்கள் மற்றும் கிராமங்கள் வாரியாகவும் இது தனித்தனியாக நடைபெற்றது.
அதில், தலைநகர் கொழும்பில் சிங்களர்களைவிட தமிழர்கள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போது கொழும்பில் 50 சதவீத சிங்களர்கள் குடியேறி இருந்தனர். தற்போது நடைபெற்ற மக்கள்தொகை புள்ளி விவரப்படி அங்கு சிங்களர்களின் மக்கள் தொகை 24 சதவீதமாக குறைந்துள்ளது.
மாறாக 24.5 சதவீதம் இருந்த தமிழர்களின் தொகை 33 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று 19 சதவீதமாக இந்த முஸ்லிம்களின் தொகையும் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொழும்பு நகரில் தற்போது 79,468 சிங்களர்களும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 325 தமிழர்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 345 முஸ்லிம்களும் உள்ளனர்.

No comments:
Post a Comment