Wednesday, December 12, 2012
இலங்கை::பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்றப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் பல பகுதிகளில் சட்டத்தரணிகள் தமது பணிகளில் இருந்து விலகியுள்ளனர்.
நேற்றையதினமும், நீதிமன்ற செயற்பாடுகளில் இடையூறுகள் ஏற்பட்டன.
இதேவேளை, இன்று முற்பகல் 10 மணி தொடக்கம் ஒருமணித்தியால ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளனர்.
கொழும்பு, கண்டி, மேல்நீதிமன்றங்கள் கோட்டை பிரதான நீதிவான் நீதிமன்றம் உள்ளிட்ட மாவட்ட மட்டத்திலான நீதிமன்றங்களில் பணிகள் ஸ்தம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment