Wednesday, December 12, 2012
பீஜிங்::சீனாவில், விமானம் கடத்த முயன்ற மூன்று பேருக்கு, மரண தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது.சீனாவின், சின்ஜியாங் மாகாணத்தின் உய்குர் பகுதியில், முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். இவர்களில் சிலர், தனி நாடு கேட்டு போராடி வருகின்றனர். தனி நாடு கேட்கும் அமைப்பை சேர்ந்த ஆறு பேர், ஜூன் மாதம், 29ம் தேதி, ஹோட்டான் நகரிலிருந்து புறப்பட்ட விமானத்தை கடத்த முயன்றனர்.
விமான ஊழியர்களுக்கும், கடத்தல்காரர்களுக்கும் நடந்த சண்டையில், இரண்டு பேர் காயமடைந்து இறந்துவிட்டனர்.விமானம் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியது. கைது செய்யப்பட்ட, நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், மூசா யூசுப், இமின், ஓமர் ஆகியோருக்கு மரண தண்டனை அறிவித்து உள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்ட அலி மூசா என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment