Wednesday, December 12, 2012

யுத்தத்தினால் பாதிப்பிற்குள்ளான மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் வளர்ச்சியடையும் நிலையில் தமிழ் கூட்டமைப்பினர் அதனை அழிப்பதற்கு முயற்சிக்கின்றனர் - ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச பொறுப்பாளர் இராமநாதன் ஐங்கரன்!

Wednesday, December 12, 2012
இலங்கை::யுத்தத்தினால் பாதிப்பிற்குள்ளான மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் வளர்ச்சியடையும் நிலையில் தமிழ் கூட்டமைப்பினர் அதனை அழிப்பதற்கு முயற்சிக்கின்றனர் என ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச பொறுப்பாளரும், வலிகிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான இராமநாதன் ஐங்கரன் தெரிவித
்தார்.

உரும்பிராய் தெற்கு செல்வபுரத்தில் உதயசூரியன் சனசமூக நிலையத்தலைவர் அகிலகுமார் தலைமையில் நடைபெற்ற கலைவிழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரும், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மாணவர்களின் கல்விமேம்பாட்டிற்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும், உதவித்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், சில சுயலாப அரசியல்வாதிகள் தமது பிள்ளைகளை உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டு, அப்பாவி பாமர மக்களின் பிள்ளைகளது கல்விச் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவித்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment