Wednesday, December 12, 2012
இலங்கை::அண்மையில் சாம்பூரில் அமைந்துள்ள சந்தோசபுரம் கிரவட்குழி பாடசாலையைச் சேர்ந்த 109 மாணவர்களுக்கு காலணிகளை கடற்படையினர் நன்கொடையாக வழங்கிவைத்தனர்.
கிழக்கு மாகாண கடற்படை கட்டளைத்தளபதியின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு நன்கொடையாளர்களும் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.
யுத்தத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் முக்கிய நோக்குடனே இந் நலன்புரி சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், மூதூர் பிரதேச செயலாளர், ரொட்ரி கழக உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தனர்.



No comments:
Post a Comment