Thursday, December 13, 2012

இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் தங்களை கொழும்புக்கு திருப்பியனுப்புமாறு அவுஸ்திரேலியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்!

Thursday, December 13, 2012
இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் தங்களை கொழும்புக்கு திருப்பியனுப்புமாறு அவுஸ்திரேலியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நவுருவிலுள்ள பரிசீலனை நிலையத்தில் இவர்களில் ஆண்கள் ஐவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது புகலிடக் கோரிக்கைகளை கைவிட முடிவு செய்துள்ளனர்.

மற்றுமொருவர் மேற்கு அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களின் நாட்டுக்கு திருப்பியனுப்பி வைக்கும் நடைமுறையானது மனிதக் கடத்தல்களை குறைவடையச் செய்யுமென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையைச் சேர்ந்த சுமார் 750 புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு திருப்பியனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அல்லது அவ்வாறு கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்துடன் எங்களுக்குள்ள உறவு குறித்து நாங்கள் மிக மிக மகிழ்சியடைகின்றோம். பொருளாதார நோக்கத்தில் புகலிடம் கோரி வருபவர்களை திருப்பியனுப்புவதற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பையிட்டு நாங்கள் மிகமிக மகிழ்சியடைகின்றோம்.

இதற்கிடையில் ,கொழும்புக்கான விஜயத்தை நாளை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார், மனிதக் கடத்தலை கட்டுப்படுத்துவது, சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தக உறவு ஆகியன தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.

No comments:

Post a Comment