Thursday, December 13, 2012

கோப்பாய் கோண்டாவில் பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த சிங்கள இளைஞர் கொலை தொடர்பாக முன்னாள் புலி உறுப்பினர் கைது!

Thursday, December 13, 2012
இலங்கை::யாழ்ப்பாணம், கோப்பாய் கோண்டாவில் பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த சிங்கள இளைஞர் ஒருவரை வெட்டிக் கொலை செய்ம  புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பதுளை இம்புல்கொட பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாக கொண்டிரந்த 36 வயதான யு.எம்.பி நிஷாந்த என்பவர் கடந்த 6 ஆம் திகதி கொலை செய்ப்பட்ட சம்பவம் தொடர்பாக கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். காவற்துறை மா அதிபரின் ஆலோசனைகளின் படி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment