Thursday, December 13, 2012
இலங்கை::இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கையின் உண்மையான நிலைமைகள் குறித்து புரிந்து கொள்ளுமாறு , அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு, இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் காணப்படும் சிறந்த சூழ்நிலை காரணமாக ஏற்கனவே பல அமெரிக்க நிறுவனங்கள் இலங்கை முதலீடுகளை செய்ய முன்வந்துள்ளதாகவும் அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை தூதுவருக்கும், அமெரிக்க காங்கிரஸின் முதல் நிலை உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில், வொஷிங்கடனில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே தூதுவர் இதனை கூறியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலைமைகள், பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி, எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் போன்றவை குறித்து ஜாலிய விக்ரமசூரிய, இதன், காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு விளக்கியுள்ளார்.
போருக்கு பின்னர், இலங்கையின் பொருளாதாரம் உண்மையிலேயே வளர்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள தூதுவர், கடந்த வருட இறுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8.3 வீதமாக இருந்து எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை போர் நடைபெற்ற பிரதேசங்களில் பொருளாதார வளர்;ச்சி வீதமானது 22 வீதமான இருந்து எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவது இரண்டு நாடுகளும் பிரயோசனமாக அமையும் எனவும் இலங்கை தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment