Thursday, December 13, 2012
இலங்கை::1998ஆம் ஆண்டு புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட தாக்குதலில் இரணைத்தீவு கடலில் வீழ்ந்த லயன் எயார் விமானத்திலிருந்த பயணிகளின் உடல் எச்சங்களை கண்டுபிடிப்பதற்கு உயர்தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்த ஆய்வுக்குழு தீர்மானித்துள்ளது.
தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த பகுதிகளில் இதுவரையில் மனித எச்சங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்ததாக சட்ட வைத்திய நிபுணர் ஆனந்த சமரசேகர குறிப்பிட்டார்.
இந்த தொழில்நுட்ப முறையின் ஊடாக மனித எச்சங்கள் காணப்படும் இடங்களை இலகுவில் கண்டறிய முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உட்பட 55 பேருடன் பலாலியில் இருந்து இரத்மலானை விமான நிலையம் நோக்கிப் பயணித்த குறித்த விமானம், 1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி இரணைத்தீவு கடலில் வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விமானத்திலிருந்த 31 பேரின் சடலங்கள் பூநகரியில் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய அவற்றை தோண்டி எடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

No comments:
Post a Comment