Wednesday, December 12, 2012

எமது நாட்டின் பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதனை வெளிநாடுகளால் தீர்க்க முடியாது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, December 12, 2012
இலங்கை::எமது நாட்டின் பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதனை வெளிநாடுகளால் தீர்க்க முடியாது. அதனால் எமக்கிடையில் நட்புறவும், தொடர்பாடலும், கலந்துரையாடலும், நம்பிக்கையும் ஏற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

'இந்து ஆலயங்களை மேம்படுத் தும் வேலைத் திட்டம் – 2012' திட்டத்தின் கீழ் இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் வைபவம் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று முன்தினம் மாலையில் இடம் பெற்றது. இவ்வைபவத்தில் உரையாற் றும் போதே ஜனாதிபதி மேற்கண் டவாறு குறிப்பிட்டார்.

நாடெங்கிலிருந்தும் இந்து மத குருமாரும், இந்து ஆலயங்களின் நம் பிக்கையாளர் சபைப் பிரதிநிதிகளும் பங்குபற்றிய இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரை யாற்றுகையில், அலரிமாளிகைக்கு வருகை தந்துள்ள உங்களை வரவேற்பதில் பெரி தும் சந்தோஷமடைகின்றேன்.

பல வருடங்களாக குரூர யுத்தம் நிலவிய நாட்டில் வாழும் மக்களுக்கிடை யில் மீண்டும் ஒற்றுமையையும் சமா தானத்தையும் ஏற்படுத்தி, மக்களின் இதயங்களில் காணப்படுகின்ற குரோதத்தை நீக்கி, சிறந்த சமய சூழலுடன் எமது எதிர்கால சந்ததியினர் வாழக்கூடிய சந் ர்ப்பத்தை மேலும் மேலும் ஏற்படுத்திக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.

நாம் 2005 ஆம் ஆண்டு முதல் சகல சமயங்களை மேம்படுத்துவதற்காகவும் மத வழிபாட்டுத் தலங்களின் அபிவிருத் திக்காகவும் நிதி உதவிகளையும் பெற்றுக் கொடுத்து வருகின்றோம்.

எமது நாட்டின் பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும். எமது நாட்டின் பிரச்சினையை வேறு நாடுகளால் தீர்க்க முடியாது. அதேபோல் எமக்கிடை யில் நட்புறவும் பேச்சுவார்த்தையும் நம்பிக்கையும் கலந்துரையாடலும் ஏற்படவேண்டும். எமது இதயங்களில் நம்பிக்கை ஏற்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். நாம் எந்நாளும் பகைமை பாராட்டிக் கொண்டு அதன்படி நாட்டில் இரண்டு சமூகங்களுக்கிடையிலும், சமயங்களுக்கிடை யிலும் வேறுபாடுகளை ஏற்படுத்துவோமா யின் அதுமிக மோசமான நிலையும் குற்றமும் ஆகும்.

இன்று இந்த அரசாங்கம் மேற்கொள் கின்ற எல்லா செயற்பாடுகளும் சிலருக்குப் பிழையாகவே தெரிகின்றது. நாட்டில் சட்டம், ஒழுங்கு இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் சமமானதாக இருப்பது அவசியம். அதனால் நாட்டில் சமாதானம், மகிழ்ச்சி என்பவற்றை ஏற்படுத்துவது என்றால்நாட்டை சட்டம், ஒழுங்கு ஆட்சிசெய்ய வேண்டும். அதன் காரணத்தினால் நாமெல்லோரும் உயர் மட்டம் முதல் அடிமட்டம் வரை யும் முன்மாதிரியானவர்களாகத் திகழ வேண்டும்.

நாம் எல்லாத் தொழில்களதும் கெளர வத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற் பட வேண்டும். எல்லா சமயங்களிலும் நல்லொழுக்கத்தைப் போதிக்கும் விட யங்கள் உள்ளன. எல்லா மத குருமாரிடமும் நல்லொழுக்கம் உள்ளது. அதேபோல் பொதுமக்களுக்கும் சட்டமுள்ளது. சட்டத்தின் முன் எல்லோரும் சமம். எல்லா அதிகாரிகளும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.

அரசாங்க அதிகாரியொருவர் பிழை செய்தால் அவரை சேவையிலிருந்து இடைநிறுத்தி விசாரணை நடாத்தும் முறைமை உள்ளது. நாட்டின் ஜனாதிபதி குற்றம் இழைத்தால் அவரைத் தண்டிப் பதற்கும் ஒருமுறை இருக்கின்றது. அத னால் எல்லா பதவிகளதும் கெளரவத்தை பாதுகாக்கும் வகையில் கடமையாற்றும் பொறுப்பு அப்பதவிக்கு நியமிக்கப்படும் நபருக்கு உள்ளது. தமிழ் மொழியில் ஒரு பழமொழி இருக்கின்றது. அதனை ‘சோறு கொட்டினால் பொறுக்க முடி யும். ஆனால் கெளரவம் இல்லாமல் போனால் அதனை மீளக் கட்டியெழுப்ப முடியாது’

சிறுவயதிலிருந்தே எமது குழந்தைகளுக்கு சமய நெறிக் கல்வியைப் பெற்றுக் கொடுத்து அவர்களுக்கு சமய அறநெறிகளை போதிப்பது எமது பொறுப்பாகும். இல்லாவிடில் அவர்கள் எமது சமயத்திலிருந்து வெளியேறி வேறு சமயங்களுக்குச் சென்றுவிட்டார்கள் என கவலைப்படுவதில் அர்த்தமில்லை. தமது சமயத்தின் மீது பற்றுக்கொண்டு செயற்பட வைப்பதற்கு நாம் ஊக்குவிக்க வேண்டும்

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமிழ் மொழியிலும் உரையாற்றினார். அந்த உரையின்போது இந்து சமயம் மிகவும் தொன்மையான சமயம். அதற்கு நீண்ட வரலாறு உள்ளது. இதனை எவரும் மறுக்க முடியாது. எமது நாட்டில் நாம் இன, மத பேதமின்றி ஒன்றுபட்டு வாழுகின்றோம். எமது நாட்டிலும் இந்து சமயம் பல்லாயிரக்கணக் கான வருடங்கள் இருந்து வருகின்றது. எமது பெளத்த விகாரைகளிலும் இந்து ஆலயங்கள் உள்ளன. இதனால் பெளத்த இந்து மக்களிடையே மிகவும் நெருங்கிய தொடர்புகள் நிலவுகின்றன. அது அன்றும், இன்றும் உள்ளது. இதேபோல் நாளையும் இது இருக்க வேண்டும். அது நிச்சயம் நிலவும், விநாயகக் கடவுளை பெளத்தர்களாகிய நாங்களும் வழிபடுகின்றோம். சரஸ்வதி, லக்ஷ்மி, துர்க்கை போன்ற தெய்வங்களை கதிர் காமத்திற்குச் சென்று நாம் வழிபடுவதும் விஷேட அம்சமாக உள்ளது.

கதிர்காமம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம் என்பன இந்நாட்டின் முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும். இந்து சமயத்திற்காக தனியான திணைக்கள மொன்றின் ஊடாக நாம் சேவைகளைப் பெற்றுக்கொடுத்து வருகின்றோம்.

இந்து கோவில்களின் புனரமைப்புக்காக மில்லியன் கணக்கான ரூபாக்களை ஏற்கனவே நாம் &:ளிவிட்டுள்ளோம். தொடர்ந்தும் செலவிடுகின்றோம்.

இந்து சமய அறநெறி பாடசாலைகளின் நடவடிக்கைகளை மேன்மேலும் மேம் படுத்துவதற்காக நாம் உதவிகளைப் பெற்றுக் கொடுக்கின்றோம். அதனடிப்படை யில் இன்று இந்து சமய நடவடிக்கைகளுக் காக மேலும் நிதியுதவி வழங்குகின்றோம். அன்பு, கருணை, அமைதி, சமாதானம் ஆகியன எமக்கு அவசியமானது. அது எம்மெல்லோருக்கும் தேவையானது.

இன்று நாம் பெற்றிருக்கும் சமாதானம் எப்போதும் அப்படியே இருக்கவேண்டும். நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் போன்று சம உரிமைகளுடன் வாழ வேண்டும். அது தான் தேவை. அது தான் எனது ஒரே நோக்கம். அதுவே சரியான நோக்கம் என்றார்.

இவ்வைபவத்தில் அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment