Wednesday, December 12, 2012

நாகை மீனவர்கள் ஏமாற்றம்!

Wednesday, December 12, 2012
நாகை::கடந்த 28ஆம் தேதி நாகையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற காரைக்காலை சேர்ந்த 40 மீனவர்களை நடுகடலில் இலங்கை கடற்படையினர் கைதி செய்தனர். இதையடுத்து கடந்த 3ஆம் தேதி திரிகோணமலையில் உள்ள நீதிமன்ற ஆஜர்படுத்தினர். அதன்படி அவர்களை நேற்று காலை இலங்கை கடற்படையினர் நாகைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தனர். இன்று காலையிலிருந்து கைதி செய்யப்பட்ட மீனவர்களின் உறவுக்காரர்களும், மீனவர்களும் காத்திருந்தனர். இதுவரை மீனவர்கள் திரிகோணமலையிலிருந்து இலங்கை கடற்படையினரால் அழைத்து வரபடாததால் நாகை மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

No comments:

Post a Comment