Wednesday, December 12, 2012
ஓசூர்::சில்லரை வணிகத்தில், இரட்டை வேடம் போட்ட தி.மு.க.,வுக்கு பார்லிமென்ட் தேர்தலில், மக்கள் சரியான பாடம் புகட்டுவர்,'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: காவிரி நதிநீர் பிரச்னையில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், கர்நாடகா அரசு, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதை, மத்திய அரசு, கெஜட்டில் பதிவு செய்ய வேண்டும். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில், தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. முதலில் ஆதரிக்க மாட்டோம் எனக் கூறியவர்கள், பின் காரணத்தை தேடிப்பிடித்து, மத்திய அரசை கவிழ்த்து விடக்கூடாது, எனக் கூறுகின்றனர். ஏற்கனவே, இலங்கை தமிழர் பிரச்னையிலும், இவர்கள், இரட்டை வேடம் போட்டனர். அதற்கு, சட்டசபை தேர்தலில், மக்கள் சரியான பாடம் கற்பித்தனர். சில்லரை வணிகத்தில் போட்ட இரட்டை வேடத்துக்கு, தமிழக மக்கள், வரும் பார்லி., தேர்தலில், சரியான பாடம் புகட்டுவர். பதவியை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கம் தவிர, தி.மு.க.,வுக்கு வேறு எந்த நல்ல எண்ணமும் இல்லை. தர்மபுரியில் சமீபத்தில் நடந்த வன்முறையில், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை, ராமதாஸ் போன்றவர்கள் நியாயப்படுத்த, வாதாட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment