Tuesday, December 04, 2012
இலங்கை::கைதிகளை நீதிமன்ற விசாரணைகளுக்காக, நீதிமன்றங்;களுக்கு அழைத்து செல்லும் போது அவர்களுக்கு விஷேட பாதுகாப்பினை வழங்கும்படி பாதுகாப்பு அமைச்சு வேண்டியுள்ளது.
இதற்கு அமைய, மேலதிக பாதுகாப்பினை காவற்துறையினரிடம் இருந்து கோரும்படி பாதுகாப்பு அமைச்சு சிறைச்சாலை திணைக்களத்திற்கு வேண்டு கோள் விடுத்துள்ளது.
இது குறித்த பணிப்புரைகள் அந்தந்த பிரதேச காவற்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தம்வசம் உள்ள சகல ரி 56 ரக தானியக்க துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கும்படி சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பீ டபிள்யூ கொடிப்பிலி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலாக, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சாதாரண ரக துப்பாக்கிளை வழங்கும்படி பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
அதேவேளை, கடந்த நொவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் ரி 56 தானியக்க துப்பாக்கிகளை தம்வசம் ஆக்கியிருந்ததை அடுத்தே இந்த மாற்று ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்றைய தாக்குதல் சம்பவத்தில் 27 கைதிகள் பலியானதுடன் விஷேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி உட்பட 40 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment