Tuesday, December 04, 2012
லண்டன்:.புலி பினாமிகளின் நாடுகடந்த தமிழீழ அரசாங்க’ அறிக்கை!
பிரித்தானியாவில் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வந்த ‘நாடுகடந்த ::(புலி பினாமிகளின்) தமிழீழ அரசாங்கம்’ என்ற அமைப்பின் நான்காவது பாராளுமன்ற அமர்வு என்று அழைக்கப்படும் அமர்வு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ளது.
அந்த (புலி பினாமிகளின்) அமைப்பு வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் சில பகுதிகள் ‘தமிழீழமே ஈழத் தமிழர் தேசத்தின் இலக்கு அந்த இலக்கு நோக்கிய பயணத்தை நாம் உறுதியுடன் தொடருவோம் என்பதை எதிரிக்கும் உலகத்துக்கும் முரசறைந்து கூறக்கூடிய வகையில் நமது நான்காவது அமர்வு நிகழ்கள் நடைபெற்று நிறைவேறியிருக்கின்றன’. என்றும்
‘பலஸ்தீனிய மக்கள் ஐக்கிய நாடுகள் சபையில் அவதானிப்பாளர் அந்தஸ்து கொண்ட அரசு என்ற தகைமையினை பெற்றுக் கொண்டமையினைப் பாராட்டி இச்சபை தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியிருக்கிறது.’ என்றும்
‘மியான்மாரின் ரொகிங்கா முஸ்லீம் மக்களுடன் தோழமையினை பகிரும் தீர்மானம் ஒன்றினையும் இச்சபை எடுத்துள்ளது.’ என்றும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புலிப் பயங்கரவாத அமைப்பு இராணுவ ரீதியில் முடக்கப்பட்டுள்ள பின்னர் , புலம்பெயர் புலிகளாலும் அதன் ஆதரவாளர்களாலும் ‘தமிழ் ஈழ தனிநாடு’ என்ற இலக்கை மாற்று அணுகுமுறையில் ஊடக அடையும் நோக்குடன் உருவாக்கபட்டுள்ள அமைப்புதான் (புலி பினாமிகளின்)‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலக்கை உள்நாட்டு ,வெளிநாட்டு இராஜந்திர நகர்வுகள் மூலம் அடைய முயற்சிக்கும் அமைப்பாகவே இந்த (புலி பினாமிகளின்)‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற அமைப்பு பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment