Tuesday, December 4, 2012

சிபிஐ இயக்குனராக ரஞ்சித் சின்கா பொறுப்பேற்பு!

Tuesday, December 04, 2012
புதுடெல்லி::மத்திய புலனாய்வு துறை இயக்குனராக ரஞ்சித் சின்கா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியில் இருப்பார்.  சிபிஐ இயக்குனராக இருந்த அமர் பிரதாப் சிங்கின் பதவிக்காலம் நவம்பர் 30ம் தேதி முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து அடுத்த இயக்குனரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கடந்த மாதம் தொடங்கியது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் தலைமையிலான தேர்வு கமிட்டி, ரஞ்சித் சின்கா உள்பட 3 பேரை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது.

பிரதமர் மன்மோன்சிங் தலைமையிலான கேபினட் கமிட்டி, ரஞ்சித் சின்கா பெயரை இறுதி செய்தது. இதை தொடர்ந்து சிபிஐயின் அடுத்த இயக்குனராக ரஞ்சித் சின்கா கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அவர் இன்று சிபிஐ இயக்குநராக முறைப்படி பதவியேற்றுக் கொண் டார். சிபிஐ இயக்குநராக பதவி ஏற்பதற்கு முன்பு வரை ரஞ்சித் சின்கா இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை இயக்குனராக பணியாற்றி வந்தார். சிபிஐ இணை இயக்குனராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment