Tuesday, December 04, 2012
இலங்கை::தமக்கு எதிரான எதிர்ப்புகளை குள்ளத்தனமான காய்நகர்த்தல் கள் மூலம் சமாளித்து, தன்னை எதிர்ப்பவர்களை கட்சியின் 54வது கூட்டத்தொடருக்கு அனுமதியளிக்காமல் பல்வேறு தில்லுமுல்லு களை செய்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தக்கவைத்துக் கொண் டுள்ள ரணில் விக்கிரமசிங்க, தான் தமது கட்சியின் பெரும் பான்மை அங்கத்தவர்களால் குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிடக் கூடிய பலவீனமான நிலையில் இருந்து, இப்போது சற்று மூச்சு விடக்கூடிய அளவுக்கு தற்காலிக நிம்மதியைப் பெற்றிருக்கிறார்.
கட்சியின் தலைமைப்பதவியை இவ்விதம் தக்கவைத்துக் கொண்ட திரு. ரணில் விக்கிரமசிங்க, தன்னை ஒரு பெரும் சாதனையாள ராக மக்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தை 2014ம் ஆண்டில் கவிழ்த்துவிட்டு, மக்களுடன் ஒட்டி உறவாடக் கூடிய ஒரு மக்கள் அரசாங்கத்தை அமைப்பேன் என்று விடுத் துள்ள சவாலை அவதானிப்பவர்கள் அவரைப் பார்த்து அனுதாபப் படுவார்களே ஒழிய அவரை பாராட்டமாட்டார்கள் என்பதை ரணில் விக்கிரமசிங்க உணர்ந்துகொள்ள வேண்டும். என்னுடைய வாழ்க்கையின் ஒரே போராட்டமாக அமைந்திருப்பது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்ப்பதுதான் என்று பகிரங் கமாக குரல் எழுப்பியுள்ள ரணில் விக்கிரமசிங்க, இனிமேல் எமது கட்சி அங்கத்தவர்கள் அநாவசியமான விசயங்களைப் பற்றி பேசி நேரத்தை வீணாக்காமல் உடனடியாக அரசாங்கத்தை கவிழ்ப்பதற் கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டுமென்று அறிவித்துள் ளார். இலங்கையின் முதலாவது பலம்வாய்ந்த அரசியல்கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சியை இந்த நிலைக்கு பலவீனப் படுத்தியவர்களில் முதல் இடத்தை வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க, முதலில் தன்னுடைய குறைபாடுகளை திருத்திக் கொண்ட பின்னர் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவது பற்றி சிந்திக்க வேண்டும். 30 ஆண்டுகாலம் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத யுத்தம் நீடிப்பதற்கும் ரணில் விக்கிரமசிங்கவே ஒரு வகையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் அதிகாரத்தில் இருந்த போது எல்.ரி.ரி.ஈ.யுடன் சமாதா னப் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் ஒரு தடவை யும் பின்னர் வெளிநாடுகளிலும் நடத்திக் கொண்டிருந்த அதே வேளையில் யுத்தத்தையும் தொடர்ந்தும் நடத்தி எமது அரசாங்கப் படைகளை எந்நேரமும் உசார் நிலையில் வைத்திருந்தது. 2001ம் ஆண்டு தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய தேசி யக்கட்சி அரசாங்கத்தில் பிரதம மந்திரி பதவியை ரணில் விக்கிரம சிங்க ஏற்றுக் கொண்ட பின்னர் அவர் வெளிநாட்டு அழுத்தங்க ளுக்கு அடிபணிந்து எல்.ரி.ரி.ஈயுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு, எல்.ரி.ரி.ஈ. இயக்கத்திற்கு வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் தன்னிச்சையாக நடமாடுவதற்கும் மக்களிடம் இருந்து வரிகளை அறவிடுவதற்கும் இடமளித்து இந்தப் பயங்கரவாத இயக் கத்தை ஒரு மறைமுகமான நிர்வாக அமைப்பாக மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்க அன்று எல்.ரி.ரி.ஈக்கு உறுதுணை புரிந்தார். எல்.ரி.ரி.ஈயுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலப் பகுதியில் ரணில் விக்கிரமசிங்கவின் பலவீனத்தை தனக்கு சாதக மாக பயன்படுத்திய எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாகரன் அமைதி நில விய இந்த காலப்பகுதியில் தனது படைப்பலத்தை பெருக்குவதற் கும் வெளிநாடுகளில் ஆயுதங்களை தருவிப்பதற்கும் மிகவும் சாதுர்யமான முறையில் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. அப்போது எல்.ரி.ரி.ஈ. இயக்கத் தலைவர்கள் சாதாரண பிரஜைகளைப் போன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு களுக்கு செல்லவும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பவும் அனுமதிக்கப்பட்டனர். இதனை பயன்படுத்திய எல்.ரி.ரி.ஈ. இயக்கம் தங்களுக்கு தேவையான இலத்திரனியல் உபகரணங்களையும் கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாகவே தருவித்தது. இதன் மூலமே எல்.ரி.ரி.ஈ. நிதர்சனம் என்ற தொலைக்காட்சி சேவை ஒன்றையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் ஆரம்பி த்து நடத்தக்கூடியதாக இருந்தது. கொழும்பு மாநகரத்தையும் கட்டு நாயக்க விமான நிலையத்தையும் தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட எல்.ரி.ரி.ஈ. இலகு ரக விமானங்களை பகுதி பகுதியாக பிரித்து அவற்றை சாதாரணப் பொதிகளைப் போன்று சிவில் விமானங் களில் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமே உதவி செய்தது. இவ்விதம் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த ரணில் விக்கிரமசிங்க எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளை துவம்சம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தைப் பார்த்து குற்றம் கூறுவது நல்லதல்ல. ஜனாதிபதி அவர்கள் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தை தன்னுடைய சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் ஒழித்துக்கட்டாமல் இருந்திருந்தால் இன்று வீராப்புடன் பேசும் ரணில் விக்கிரமசிங்க தனது வீட்டைவிட்டு வெளியேறப் பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்திருப்பார். ஜனாதிபதி அவர்களின் சிறந்த ஆளுமைத்திறன் மூலம் இன்று நாட் டில் அமைதியும், சமாதானமும் நிலைகொண்டுள்ளது. இந்த சந்தர் ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கட்சி தலைமைத்துவத்தை அடுத்த ஆறுவருட காலத்திற்கு தக்க வைத்துக் கொண்டு கட்சியை ரணில் விக்கிரமசிங்க வளர்த்து கட்டியெழுப்புவதில் தனது முழு நேரத்தையும் செலவிட வேண்டும். அதைவிடுத்து அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது குறிக்கோள் என்று வீறாப்பாக பேசி ஆக்க பூர்வமான திட்டங்களில் இறங்காமல் தன்னை பலவீனப்படுத்திக் கொள்ளக்கூடாதென்று நாம் அவருக்கு யோசனை கூற விரும்பு கிறோம்.


No comments:
Post a Comment