Monday, December 03, 2012
புதுடெல்லி::இந்திய ராணுவத்திற்கு பிரத்யேகமான மினி ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும் என தெரிகிறது. இதுதொடர்பாக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிக்ராம் சிங் கூறியதாவது:-
சமீபத்தில் நடந்த யுத்தப் பயிற்சி சண்டையில் இந்திய விமானப்படை வெற்றி கொண்டதையடுத்து ராணுவ பிரிவுக்கு பிரத்யேகமான மினி ஏர்போர்ட் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவாக ஒரு நிரந்தர விமானப்படைக்கு அங்கீகாரம் அளித்து பேசிய அவர் இந்த விமானப்படை பிரிவானது இந்த மாத இறுதியில் முழுமையாக செயல்பட துவங்கும். மேலும் இது பல்வேறு வகையான ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக போர் விமானங்களை கொண்டு செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ராணுவத்தில் ஏற்கனவே இதுபோன்ற விமானப்படையும் செயல்பட்டு வருகிறது. சுமார் 75 ஆயிரம் படைவீரர்களை கொண்ட 10 விமானப்படை பிரிவு ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் தொடங்கப்பட்டு விட்டது. தற்போது இந்த பிரிவு துருவ், சீட்டா, சேட்டக் உள்பட 250 ஹெலிகாப்டர்களை இயக்கி வருகிறது. தவிர மதுரா, அம்பாலா மற்றும் போபாலில் உள்ள ராணுவப் பிரிவுகளுக்கு 10 முதல் 12 படை வீரர்கள் கொண்ட ஹெலிகாப்டர் மூலம் தாக்கும் குழு தேவைப்படுகிறது.
மேலும் 114 ருத்ரா வகை ஹெலிகாப்டர்களையும் இந்த பிரிவில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராணுவத்தின் நீண்ட காலத் திட்டமாக இந்த விமானப்படை பிரிவுகளில் தாக்குதல்படை, ஆயுதப்படை, உளவுப்படை மற்றும் திறமை வாய்ந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்தப்படும் என தெரிகிறது. மேலும் 6 மண்டலங்களில் சிறிய ரக போர் விமானங்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ராணுவத்தின் இந்த விமானப்படை பிரிவில் 10 ஆயிரம் படை வீரர்களில் 5 ஆயிரம் வீரர்கள் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து வந்தவர்கள் மீதமுள்ள 5 ஆயிரம் பேருக்கு நிரந்தர பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிகிறது.
இந்திய ராணுவ விமானப்படை பிரிவுக்கான நேரடி ஜூனியர் கமிஷன் அதிகாரிகளை தேர்வு செய்யும் பணி 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும். இந்த அதிகாரிகள் கணிசமான அளவில் ராணுவ ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள டேராடூன், சென்னை மற்றும் கயாவில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள் என ஜெனரல் பிக்ராம்சிங் தெரிவித்துள்ளார்.
இந்த விமானப்படைப் பிரிவின் முக்கிய நோக்கமானது நவீனரக போர்க் கருவிகளை திறம்பட இயக்க வல்ல படை வீரர்களை உருவாக்குவதுதான். மேலும் இரண்டு மாதத்திற்குள் புதிய ரக தாக்கும் ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் எதிரிகளின் இலக்கை தாக்கக்கூடிய ராக் கெட்டுகளும் இந்த பிரிவுக்கு வழங்கப்படும். இவை தரைப்படை தாக்குதலுக்கும் பயன்படுத்தப்படும்.
இதற்கிடையில், இந்திய விமானப்படையின் சில அதிகாரிகள், ராணுவத்தில் தொடங்கப்பட்டுள்ள விமானப்படை பிரிவானது விமானப்படையை காப்பி அடிப்பது போல உள்ளது. தேவையற்றது என தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
சீன எல்லை பகுதிகளில் ராணுவ தளபதி ஆய்வு!
கோல்கட்டா :சீன எல்லையை ஒட்டிய வட கிழக்கு மாநிலங்களில், ராணுவ தளபதி, விக்ரம் சிங் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ராணுவ தளபதியாக, கடந்த மார்ச், 31ம் தேதி, விக்ரம் சிங் பொறுப்பேற்றதும், வட கிழக்கு மாநிலங்களில், சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தினார். இதற்காக அவர், சுக்னா, திமாபூர் மற்றும் தேஸ்பூர் பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களுக்கு சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், நேற்று அவர், கோல்கட்டாவிலிருந்து, அருணாச்சல பிரதேசம் வரையிலான, கிழக்கு பிராந்தியத்திற்கான ராணுவ தளங்களுக்கு சென்று, அங்குள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டார். அவருடன், கிழக்கு பிராந்திய ராணுவ கமாண்டர், லெப்டினன்ட் ஜெனரல், தல்பிர் சிங் சுகாக் சென்றிருந்தார்.ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்கும் முன், இரண்டாண்டுகளுக்கு, கிழக்கு பிராந்திய ராணுவ தளபதியாக, விக்ரம் சிங் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment