Monday, December 3, 2012

.காணாமல்போன நான்கு சுழியோடிகளும் மீட்பு!

Monday, December 03, 2012
இலங்கை::கல்கிஸ்ஸ கடற்பகுதியில்  காணால்போன நான்கு சுழியோடிகளும் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்று காலை ஒருவர் மீட்கப்பட்ட பின்னர் அவர் வழங்கிய தகவல்களின்படி எஞ்சிய சுழியோடிகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீட்கப்பட்ட சுழியோடிகள் கல்கிஸ்ஸ கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக  எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கல்கிஸ்ஸ கடற்பரப்பில் நேற்று மாலை சுழியோடுவதற்காக கடலுக்குச் சென்ற பிரான்ஸ் பிரஜை உட்பட நான்கு சுழியோடிகள் காணாமல்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொள்ளுப்பிட்டியிலிருந்து நேற்று தாம் சுழியோடுவதற்காக  சென்றிருந்ததாக மீட்கப்பட்ட நால்வரில் ஒருவரான நக்கீம்
 தெரிவித்தார்.

சுழியோடிக்கொண்டிருந்த போது தாம் நீரோட்டத்தில் சிக்கியதாகவும் அதனைத் தொடர்ந்து தாம் சென்ற படகிற்கு திரும்ப முடியாது போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் தாம் காலி முகத்திடல் பக்கத்திற்கு நீந்தி வர முயற்சித்தபோதிலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
நேற்றிலிருந்து தாம் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்ததாகவும் இன்று காலை மீனவப் படகின் மூலம் தாம் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment