Monday, December 03, 2012
இலங்கை::ஐ.நா. கொழும்பு அலுவலகத்தின் மீது குற்றம் சுமத்தி இலங்கைக்கு எதிரான மற்றுமொரு மனுவை அமெரிக்கா தயாரித்து வருகிறது. மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இம்மனு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் விமல் வீரசன்ஸ தெரிவித்தார்.
இது தருஸ்மன் அறிக்கையைப் பார்க்கிலும் பாரதூரமாக அமையுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.அமெரிக்கா உள்ளிட்ட பல ஏகாதிபத்திய நாடுகள் இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தவறான கருத்துக்களை சேகரித்து வருவ தாகவும் அமைச்சர் கூறினார்.
இறுதிக்கட்ட போரில் புலிகள் தலைவர் உட்பட முன்னணி உறுப்பினர்களைக் காப்பாற்ற செயற்படாமை, அக்காலகட்டத்தில் பான் கீ மூனை இலங்கைக்கு தருவிக்க செயற்படாமை.
ஐ. நா. அமைதிப் படையின் சேவையைப் பெறாமை போன்றவை ஐ.நா. கொழும்பு அலுவலகத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக் களாகும். இது தொட்ரபாக சர்வதேச விசாரணை ஒன்றையும் கோருவதற்கும் புதிய யோசனையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தருஸ்மான் அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ள தவறான காரணங்களை உறுதிப்படுத்து வதற்கும் புதிய பிரேரணையில் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார

No comments:
Post a Comment