Wednesday, December 05, 2012
இலங்கை::சூரிய மண்டலத்தின் பிரதான மூன்று கிரகங்கள் எதிர்வரும் வாரம் ஒரே நேர் கோட்டுக்கு வரவுள்ளதாக விண்வெளி ஆய்வு திணைக்களத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இது மிகவும் அரிதாக இடம்பெறும் சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாலை வேளையில் தொலைவானின் கிழக்கு பகுதியில் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிரகங்கள் இவ்வாறு ஒரே நேர்க்கோட்டில் காணமுடியும் என்றும், சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சூரிய மண்டலத்தின் பெரும்பாலான கிரகங்கள் ஒரு நேர் கோட்டில் அமைகின்றமை இந்த மாதத்தில் உலக அழிவு இடம்பெறும் என்ற கருத்து வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் விஞ்ஞான ரீதியாக அதில் உறுதித் தன்மை இல்லை என்று, விண்வெளி ஆய்வாளர் சந்தன ஜயரன்ன தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment