Wednesday, December 5, 2012

அன்னிய முதலீடு விவகாரம் : சுஷ்மா சுவராஜ் குற்றச்சாட்டுக்கு அமெரிக்க நிறுவனம் மறுப்பு!

Wednesday, December 05, 2012
புதுடெல்லி::இந்தியாவில் தொழில் தொடங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டில் மூலப்பொருட்களை வாங்குவதில்லை என நாடாளுமன்றத்தில் பாஜ தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியிருப்பதற்கு அமெரிக்க தனியார் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதற்கு பாஜ உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ளன.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் விவாதத்தை துவக்கி வைத்து பேசினார். அப்போது, ÔÔஅன்னிய முதலீட்டால் இந்திய விவசாயிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. ஏற்கனவே இங்கு தொழில் செய்து வரும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான உருளைக்கிழங்கு, சிக்கன் போன்ற மூலப்பொருட்களை அவர்கள் நாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்கின்றனÕÕ என குற்றம் சாட்டினர்.

இதற்கு சிக்கன், மட்டன் பர்கர், பிரெஞ்ச்பிரை போன்ற நொறுக்கு தீனிகளை விற்பனை செய்து வரும் மெக்டொனால்டு அமெரிக்க நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய அரசுடன் செய்த கொண்ட ஒப்பந்தப்படி பர்கர், பிரெஞ்ச்பிரை செய்வதற்கான உருளைக்கிழங்கு உள்பட அனைத்து மூலப்பொருட்களும் இந்திய விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதாகவும், உள்நாட்டில் கிடைக்காத சமயத்தில் மட்டும்தான் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment