Wednesday, December 05, 2012
இலங்கை::இந்திய மீனவர்களின் சட்டவிரோத கடல் எல்லை அத்துமீறல்களை கண்டித்து வடக்கு மீனவர்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சிலர் தமது பிரச்சினைகள் குறித்து எமது செய்திப் பிரிவுக்கு கருத்து வெளியிட்டனர்.
இதேவேளை இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நாகப்பட்டித்தை சேர்ந்த மீனவர்களை விடுவிக்குமாறு கோரி, தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதில் 10 ஆயிரம் மீனவர்கள் வரையில், பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், பைபர் மற்றும் 2 இயந்திர படகுகள் உட்பட 500 படுகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபா இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தமிழக மீனவர்களின் இந்த பணிப்பகிஸ்கரிப்பு தொடர்பில், தமிழக மீனவர்கள் சங்கத்தின் தலைவர் தேவதாஸ், எமது செய்திப்பிரிவுக்கு தகவல் வழங்கினார்.
இலங்கை கடற்எல்லையில் அத்துமீறி நுழைந்த 37 இந்திய மீனவர்களை எதிர்வரும் 10 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருகோணமலை பதில் நீதவான் திருச்செந்தில் நாதன் முன்னிலையில் நேற்று மாலை குறித்த விசாரணைகள் இடம்பெற்றன.
இந்திய மீனவர்களின் படகுகளில் மீன்கள் இருந்தால் அவற்றை விற்பனை செய்யுமாறு திருகோணமலை காவல்துறையினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலையான மீனவர்கள், கடற்காற்று காரணமாக தாம் திசைதெரியாமல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்ததாக தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment