Wednesday, December 5, 2012

இலங்கையிடம் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள சில வெளிநாட்டு இராணுவங்கள் ஆர்வம் காட்டி வருவதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்!

Wednesday, December 05, 2012
இலங்கை::இலங்கையிடம் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள சில வெளிநாட்டு இராணுவங்கள் ஆர்வம் காட்டி வருவதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

யுத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும், பயிற்சிகளை வழங்குவதற்கும் வெளிநாட்டுப் படையினர் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சபுகஸ்கந்தவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு இராணுவ பயிலுனர்களுக்காக இலங்கை இராணுவம் நான்கு பயிற்சி நெறிகளை நடாத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாளுக்கு நாள் வெளிநாட்டு இராணுவ பயிற்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், இந்தியா, மாலைதீவு, சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பயிற்சிகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஆகஸ்;ட் மாதம் நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்கில் 44 நாடுகள் பங்கு பற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டிலும் இவ்வாறான சர்வதேச பாதுகாப்பு மாநாடொன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment