Wednesday, December 05, 2012
இலங்கை::எமது பிரதேசத்தின் மூத்த கலைஞர்கள் யுத்த சூழலுக்குள்ளும் கலைகளை வளர்ப்பதற்காக தங்களுடைய நிறைவான பங்களிப்புக்களை செய்துள்ளனர் என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை::எமது பிரதேசத்தின் மூத்த கலைஞர்கள் யுத்த சூழலுக்குள்ளும் கலைகளை வளர்ப்பதற்காக தங்களுடைய நிறைவான பங்களிப்புக்களை செய்துள்ளனர் என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற கிளநொச்சி மாவட்ட கலாச்சார விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், குறைந்தளவான வளங்களுடன் எங்களுடைய பிரதேசங்களில் நிறைவான பல மாற்றங்கள் நிகழ்ந்து வருக்கின்றன மீள்குடியேறிய இந்த குறுகிய காலத்திற்குள் இங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை மனசாட்சியுள்ள அனைவரும் நன்கறிவர் நாளுக்குநாள் எமது பிரதேசங்களில் முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாகவே எங்களுடைய கலைகலாசாரங்களை பாதுகாக்கும் இது போன்ற நிகழ்வுகளாகும். எமது கலைஞர்கள் பல நெருக்கடியான காலக்கட்டங்களிலும் தங்களுடைய துறைகளை வளர்ப்பதில் மிகுந்த பங்களிப்பு செய்துள்ளனர் இன்று கௌரவிக்கப்பட்டுள்ள அறுபது வயதிற்கு மேற்பட்ட மூத்த கலைஞர்கள் பாராட்டுக்குரிய அதேவேளை அவர்கள் மேலும் பல கலைஞர்களை இந்த சமூகத்திற்காக உருவாக்கி விட வேண்டும் அதே வேளை இலைமறைகாயாக உள்ள கலைஞர்களையும் வளர்த்துவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் எல்லோரும் எல்லாத் துறைகளிலும் திறமையாக செயற்படவேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர் எமது கலை பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்க எடுக்கப்படும் எல்லா நடவடிகைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மேலதிக அரச அதிபர் சீர்ணிவாசன், உதவி அரச அதிபர் தலைமைபீடம் திருமதி ஜெயரானி, பிரதேச செயலர்களான நாகேஸ்வரன், சத்தியசீலன் முகுந்தன், வசந்தகுமார் மற்றும் திணைக்களங்களின் உயரதிகாரிகள் கலைஞர்கள் பொதுமக்கள் குருகுல சிறுவர் இல்ல சிறார்கள் என பலரும் கலந்துகொண்டனர்




No comments:
Post a Comment