Sunday, December 02, 2012
இலங்கை::யாழ்.மாவட்டத்தில் தற்போதும் இயங்கி வரும் நலன்புரி நிலையங்களை திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (2) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் 10 பிரதேச செயலர் பிரிவுகளில் வீட்டுத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாகவும் இதன்போதான பயனாளிகள் தெரிவுப் பட்டியலை கிராம சேவையாளர் அலுவலகம், மற்றும் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்படவேண்டுமென்றும், இதில் ஏதாவது தவறுகள் ஏற்படுமாயின் அவை கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்குப் பதிலீடாக வேறு பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
இதனிடையே படைத்தரப்பினர் வசமுள்ள அரச, தனியார் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் அவை தொடர்பாக பிரதேச செயலர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன், மீள்குடியேற்றத்திற்காக மீளளிக்கப்படாதுள்ள பகுதிகளை படிப்படியாக விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
அத்துடன் யாழ்.மாவட்டத்தில் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாதுள்ள யாழ்.மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தற்போதும் எட்டு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படும் வரையில், அவர்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களை முன்னுரிமை அடிப்படையில் திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நலன்புரி நிலையங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டுமென அங்குவாழும் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பொருளாதார அபிpவிருத்தி அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வாழ்வின் எழுச்சி (திவிநெகும) திட்டத்திற்கமைவான வேலைத்திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் அதனூடாக பயனாளிகள் அடைந்து வரும் பயன்பாடுகள் குறித்தும் அந்தந்த கிராம சேவையாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்தோர் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
யாழ்.மாவட்டக் கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்து கொண்டதுடன், மாவட்டத்தின் கல்வித்துறையை மேம்படுத்தும் பொருட்டு வடமாகாணத்தில் 2500 ஆசிரியர்கள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் இவர்கள் முக்கிய பாடங்களான விஞ்ஞானம், ஆங்கிலம், கணிதம், ஆகிய பாடங்களுக்கான பட்டதாரி பயிலுனர் ஆசிரியர்களை யாழ்.மாவட்டத்தில் நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே நடப்பாண்டில் பல்வேறு திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்), உள்ளிட்ட மாகாண செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment