Monday, December 3, 2012

வெளிநாட்டு தயாரிப்பு என இனங்காணப்பட்ட கைக் குண்டு ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

Monday, December 03, 2012
இலங்கை::நாகொட, கொனலகொட பிரதேசத்தில் வெளிநாட்டு தயாரிப்பு என இனங்காணப்பட்ட கைக் குண்டு ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (02) மாலை இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இன்று நீமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள அதேவேளை நாகொட பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நுகர்வோர் அதிகார சபையையின் அதிகாரிகள் எனக் கூறி வர்த்தக நிலையங்களில் கப்பம் பெற்ற இருவர் கைது!

நுகர்வோர் அதிகார சபையையின் அதிகாரிகள் எனக் கூறி வர்த்தக நிலையங்களில் கப்பம் பெற்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவுல பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்ற இவ்விருவரும் பொருட்களின் விலைகளை விசாரித்துள்ளனர்.

நுகர்வோர் அதிகார சபையின் நிர்ணயித்த விலையில் அந்த பொருட்களின் விலைகள் இல்லை என தெரிவித்ததுடன் தாங்கள் இருவரும்  நுகர்வோர் அதிகார சபையை அதிகாரிகள் எனக் கூறி வர்த்தக நிலையங்களுக்கு அபராதமும் விதித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கான விலைப் பட்டியல் நுகர்வோருக்கு காட்சிப்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிகாட்டி அதற்கும் அபராதம் விதித்துள்ளனர்.

இவ்விருவரும் ஒவ்வொரு வர்த்தக நிலையங்களுக்கும் ஆயிரம் ரூபா முதல் 5,000 ரூபாவரை அபராதம் விதித்துள்ளனர். இவ்விருவர் தொடர்பிலும் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்தே இவ்விருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை நடத்திய போது அவ்விருவரும் நுகர்வோர் அதிகார சபையை அதிகாரிகள் இல்லை என்பது தெரியவந்தது.

No comments:

Post a Comment