Thursday, December 6, 2012

இலங்கையின் அடுத்த பிரதமராக சிரேஸ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்ரமநாயக்க நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது!

Thursday, December 06, 2012
இலங்கை::இலங்கையின் அடுத்த பிரதமராக சிரேஸ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்ரமநாயக்க நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரமதர் டி.எம். ஜயரட்ன சுகவீனமடைந்துள்ள காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜயரட்ன விரைவில் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இராஜினாமா கடிதத்தை பிரதமர், ஜனாதிபதியிடம் விரைவில் ஒப்படைக்க உள்ளார்.

பிரதமரின் இராஜினாமாவினால் ஏற்படும் வெற்றிடத்திற்கு அவரது புதல்வர் அனுராத நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரதம நியூயோர்க்கில் சிகிச்சை பெற்று வந்த போது அவரைப் பார்வையிட ஜனாதிபதி சென்றிருந்த போது இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அடுத்த பிரதமராக சிரேஸ்ட அமைச்சரும், முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 4ம் திகதி முதல் ரட்ணசிறி விக்ரமநாயக்கவிற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment