Thursday, December 06, 2012
இலங்கை::எதிரானவர்களை தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பதா ஊடக சுதந்திரம்?
அவதூறுகளை அள்ளிவீசியதனாலேயே சில அலைவரிசைகளை தடை செய்ய நேர்ந்தது
கே. அசோக்குமார் - ஸாதிக் ஷிஹான்
ஊடகச் சுதந்திரம் என்பது காட்டுக்கழுதைச் சுதந்திரமாக இருக்கக் கூடாது. தமக்கு எதிரான வர்களை தனிப்பட்ட ரீதியில் மோசமாக விமர்சித்து அவரையும் அவரது குடும்பத்தையும் அழி ப்பது ஊடக சுதந்திரமா? என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஊடக சுதந்திரம் என்பதற்கு வரையறை இருக்க வேண்டும். கண்மூடித்தனமான சுதந்திரம் இருக்கக் கூடாது.
நாங்கள் ஒழுக்க விழுமியங்களை பேணக்கூடிய ஒரு கெளரவமான ஊடக சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறோம். ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். இதனாலேயே அரசு விதிகளை மீறிய சில அலைவரிசைகளை தடை செய்துள்ளது.
இப்போது எல்லோரும் எதற்கெடு த்தாலும் ஊடக சுதந்திரம் இல்லை என்று பேச அரம்பித்துள்ளனர். தகவல் அறியும் உரிமை தொடர்பாக நாம் சில மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறோம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்கீட்டிற்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
எமது நாட்டில் வெளிவரும் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளை எடுத்துக்கொண்டால் அரச பத்திரிகைகளைத் தவிர அனைத்தும் அளவுக்கு மீறிய சுதந்திரத்துடன் செயற்படுகின்றன.
ஊடகவியலாளர்களை நவீன உலகுக்கு ஏற்ற வகையில் கொண்டு வருவதற்காகவே மடி கணனிகள் வழங்கினோம். வழங்கப்பட்டதில் சில முறைப்பாடுகள் உள்ளன. ஆனால் ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே வழங்கியிருக்கிறோம். இலவசமாக கொடுக்கும் போது சில விமர்சனங்கள் எழும். அவை எதிர்காலத்தில் சரி செய்யப்படும்.
விண்ணில் ஏவப்பட்ட செய்மதி தொடர்பாக இந்த சபையில் விமர்சனங்கள் செய்யப்பட்டன. நான் இந்த சபையில் அது தொடர்பான சரியான விளக்கத்தை விரைவில் அளிக்கவுள்ளேன். இச் செய்மதி தொடர்பாக விற்பன்னர்கள், நிபுணர்களிடமிருந்து தகவல்களைக் கோரியுள்ளேன். அவை கிடைத்தவுடன் விரிவான அறிக்கை சமர்ப்பிப்பேன் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

No comments:
Post a Comment