Thursday, December 06, 2012
சென்னை::வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், இலங்கை (புலி ஆதரவு) தமிழர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று, இந்திய ஜனதா கட்சியின் தலைவரும், முன்னாள் நீதி அமைச்சருமான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் இலங்கையில் புலிகள் மேற்கொண்ட வன்முறைகள் மற்றும் சிறுவர் போராளிகளை கொண்டிருந்தமை உள்ளிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எனினும் புலம்பெயர்ந்த (புலி ஆதரவு) இலங்கை தமிழர்கள் இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக தெரிவித்து, அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
இந்த நிலையில், இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்காதிருப்பதற்கு, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் புலம்பெயர்ந்த (புலி ஆதரவு) தமிழர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

No comments:
Post a Comment