Thursday, December 06, 2012
இலங்கை::யாழ் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த உதவிகள்
கிளிநொச்சி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தால் 20 மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்று நடாத்தப்பட்டது
கிளிநொச்சி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தால் 20 மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்று நடாத்தப்பட்டது.
கந்தளாய், ஜெயன்திகம் பிரதேசத்தைச் சேர்ந்த 222ஆவது இராணுவ படைப்பிரிவினால் க.பொ.த(சா/த) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட்டன. திருகோணமலை கல்லாறு சோமாவதி வித்தியாலயத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் பல பாடசாலைகளை சேர்ந்த 100க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இக் கருத்தரங்குகள் ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்களால் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கருத்தரங்கில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கு சேருநுவர மக்கள் வங்கியால் முன்மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள் வழங்கப்பட்டதுடன், 22 ஆவது வி.ஐ.ஆர் படைப்பிரிவால் சிற்றுண்டி மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
இதைத்தவிர மேலுமோர் கல்வி மேம்பாட்டு நிகழ்வு வன்னிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வன்னி வவுனியா வித்தியாலயத்தின் 50 மாணவர்களுக்கு 2000/= பெறுமதியான புலமைபரிசிலும் பாடசாலை உபகரணங்கள் உள்ளடங்களான கல்வி ஆய்வுத் தொகுப்புகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் முகமாக பாதுகாப்புப் படையினர் வடக்கு மற்றும் கிழக்கில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக பல வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





No comments:
Post a Comment