Tuesday, December 4, 2012

சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் எந்த சக்திகள் வந்தாலும் திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்படும் - பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ!

Tuesday, December 04, 2012
இலங்கை::சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் எந்த சக்திகள் வந்தாலும் திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எந்த தடைகள் வந்தாலும் பயங்கரவாதத்தை தோற்கடித்ததை போன்று, திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சட்டமூலத்தினால் கிடைக்கும் பலாபலன்களை மக்களை பெற்றுக்கொடுக்க போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கம்பஹா  சந்திரஜோதி கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பசில் ராஜபக்ஷ இதனை கூறியுள்ளார்.
குறைந்த வருமானத்தை பெறும்  18 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்,  சமூர்த்தி அதிகாரிகளின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் முன்வைக்கப்பட்ட திவிநெகும சட்டமூலத்தை தற்போது பலர் எதிர்த்து வருகின்றனர். முற்போக்கான வேலை ஒன்றை செய்ய முனையும் போது, இவ்வாறான எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்றன.
மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தி கொடுக்கும் திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றி, மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க போவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்;. 

No comments:

Post a Comment