Tuesday, December 04, 2012
அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்கள் தமது நாடு கடத்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவை பெற்றுள்ளார்கள்.
அகதிகளுக்கான நடவடிக்கை குழு இந்த மனுவை தாக்கல் செய்தது.
தாம், நேற்று காலை நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவித்த, இலங்கை அகதிகள் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியே மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இதனை ஏற்று கொண்ட சிட்னி நீதிமன்றம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வரை இடைக்கால தடையுத்தரவை விடுத்துள்ளது.
அதேநேரம், குறித்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய காரணங்களை இன்று நீதினமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் சிட்னி நீதிமன்றம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment