Wednesday, December 05, 2012
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கடந்த 2ம் திகதி அழைப்பு விடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நடைபெறவிருந்த இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதில்லை என கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
வேறும் திகதியில் பேச்சுவார்த்தைகளை நடாத்த சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அடுத்த வாரமளவில் வேறும் ஓர் தினத்தில் இந்த சந்திப்பினை நடாத்த ஏற்பாடு செய்வார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


No comments:
Post a Comment